அப்பனை நந்தியை

 

அப்பனை நந்தியை ஆரா அமுதினை

ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை

எப்பரிசு யாயினும் ஏத்துமின் ஏத்தினால்

அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே...

 

உயிர்களுக்குஎல்லாம் தலைவனை , தந்தையான இறைவனை உண்ண உண்ண தெவிட்டாத இன்னும் உண்ணவேண்டும் என்ற ஆசை தீராத அமுதம் போன்றவனை தனக்கு ஒப்பார்  இல்லாத அருளை வாரி வழங்கும் வள்ளலை ஊழி காலத்தும் தான் அழியாது இருக்கின்ற முல முதல்வனை, எந்த வகையிலாயினும் போற்றி புகழ்ந்து பணிந்து பரவுங்கள், பரவினால் அவனது அருள் என்ற பரிசைப் பெறலாம் என்கிறார் திருமூலர்



Comments

Popular posts from this blog

திருமந்திரம் - பாடல் #1090

திருமந்திரம் - பாடல் #1098

திருமந்திரம் - பாடல் #1084