திருமந்திரம் - பாடல் #1089

 

திருமந்திரம் - பாடல் #1089: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

அந்த நடுவிர லாதி சிறுவிரல்
வந்த வழிமுறை மாறி யுரைசெயுஞ்
செந்தமி ழாதி தெளிந்து வழிபடு
நந்தி யிதனை நவமுரைத் தானே.

விளக்கம்:

சுண்டு விரலில் உள்ள மூன்று கோடுகளில் ஆரம்பித்து நடு விரலில் உள்ள மூன்று கோடுகளில் முடிக்கும்படி மொத்தம் ஆறு எழுத்துக்கள் கொண்ட தூய தமிழ் மந்திரத்தை குருவின் அருளால் பெற்று அதை முதலில் நேர் மறையாகவும் பின்பு எதிர்மறையாக மாற்றியும் ஓதி வழிபடுங்கள் என்று குருவாக இருக்கும் இறைவன் ஒன்பது சக்திகளை வழிபடும் முறையாக அருளினான்.

Comments

Popular posts from this blog

திருமந்திரம் - பாடல் #1090

திருமந்திரம் - பாடல் #1098

திருமந்திரம் - பாடல் #1084