திருமந்திரம் - பாடல் #1101

 

திருமந்திரம் - பாடல் #1101: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

வெளிப்படு வித்து விளைவறி வித்துத்
தெளிப்படு வித்தென சிந்தையி னுள்ளே
களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி
ஒளிப்படு வித்தென்னை யுய்யக்கொண் டாளே.

விளக்கம்:

பாடல் #1100 இல் உள்ளபடி அனைத்திற்கும் மேலான சதாசிவத்தை வெளிப்படுத்தி அருளிய வயிரவி தேவி அதன் பயனாக பேரறிவு ஞானத்தைக் கொடுத்து அந்த ஞானத்தின் பயனாக தெளிவான சிந்தனையைக் கொடுத்து அதன் பயனாக பேரின்பத்தை அடைய வைத்து அதன் பயனாக பெருஞ்சோதி வடிவான இறைவனுடன் கதிர் வடிவான எம் ஆன்மாவை சேர வைத்து அதன் பயனாக எம்மையும் சோதி உருவம் பெற வைத்து எமது ஆன்மா முக்தியடையும்படி செய்து எம்மை முழுவதும் ஆட்கொண்டாள்.

Comments

Popular posts from this blog

திருமந்திரம் - பாடல் #1090

திருமந்திரம் - பாடல் #1098

திருமந்திரம் - பாடல் #1084